உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வில்லியனுாரில் தி.மு.க., கோலப்போட்டி

 வில்லியனுாரில் தி.மு.க., கோலப்போட்டி

வில்லியனுார்: வில்லியனுாரில் தி.மு.க., சார்பில் கோலப்போட்டி திருக்காமீஸ்வரர் ஆலய வளாகத்தில் நேற்று நடந்தது. ரங்கோலி, உருவக்கோலம், புள்ளிக்கோலம் என மூன்று பிரிவுகளில் நடந்த கோலப்போட்டியில் வில்லியனுார் தொகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். கோலப்போட்டியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கிவைத்து பார்வையிட்டார். நடுவர்களாக தேசிய விருதாளர் டெரக்கோட்டா வெங்கடேசன், தேசிய மெட்ரோ திட்ட செயலர் தனலட்சுமி, ஓவியர் ரகுபதி, ஓவிய பயிற்சியாளர் சங்கீதா சிவா செயல்பட்டு சிறந்த கோலங்களை தேர்வு செய்தனர். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மகளிருக்கு கிரைண்டர், இரண்டாம் பரிசா 6 நபர்களுக்கு மின் அடுப்பு, மூன்றாம் பரிசாக 9 மகளிருக்கு பிரஷர் குக்கர் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் கொடுக்க உள்ளனர். இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக தி.முக நிர்வாகிகள் மணிகண்டன், ரமணன், சரவணன், குமுகாயம் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பரசுராமன், ரஜினிமுருகன், வில்வம் பவுண்டேஷன் தசரதன் ஆகியோர் செயல்பட்டனர்.மேலும் தொகுதியை சேர்ந்த பல்வேறு பிரிவு கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி