மேலும் செய்திகள்
பா.ம.க., ஆலோசனை கூட்டம்
18-Oct-2026
புதுச்சேரி: தி.மு.க., செயற்குழுக் கூட்டத்தில் உதயநிதி பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி மாநில தி.மு.க., செயற்குழு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இன்று (நவ.,16) நடந்தது. கூட்டத்திற்கு, தி.மு.க., மாநில அவைத்தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, தி.மு.க., எம்.எல்.ஏக்கள்., கார்த்திகேயன், செந்தில், விக்னேஷ் கண்ணன், மாநில இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க., மாநில அமைப்பாளரும், முன்னாள் எதிர்கட்சி தலைவர் சிவா கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள்., மூர்த்தி, நந்தா. சரவணன், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் லோகையன், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., செந்தில் தந்தை அர்ஜூணன், சோரியாங்குப்பம் மொழிப்போர் தியாகி பார்த்தசாரதி, பங்கூர் ரமேஷ் உள்ளிட்ட தி.மு.க., முன்னோடிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் , விளையாட்டுப் போட்டிகள், மருத்துவ முகாம்கள், இளைஞர்கள் மத்தியில் திராவிட இயக்கக் கொள்கைகள், சமூக நீதி மற்றும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்குகள், பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
18-Oct-2026