உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  எஸ்.ஐ.ஆர்., அலுவலர்களுடன் தி.மு.க., நிர்வாகி சந்திப்பு

 எஸ்.ஐ.ஆர்., அலுவலர்களுடன் தி.மு.க., நிர்வாகி சந்திப்பு

புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி எஸ்.ஐ.ஆர்.,ஓட்டுச்சாவடி முகாம்களில் பணியாற்றும் நிலை அலுவலர்களிடம் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, பெறப்படாத விண்ணப்பப் படிவங்களை, தி.மு.க.,வினருடன் இணைந்து வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவங்களை விரைந்து பெற வேண்டும் என நிலை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். மேலும், விண்ணப்பப் படிவம் அளிக்காதவர்கள் இரண்டு நாட்களுக்குள் அங்கன்வாடி மையம் அல்லது நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென தொகுதி மக்களுக்கு அறிவுறுத்தினார். இதில், நிர்வாகிகள் ராமலிங்கம், கலியசாமி, சித்து, தமிழ்மணி, சுகுமாரன், இளங்கோ மன்னன், பாபு, கமல் பாலா, காந்தி, சந்துரு, சபரிநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ