உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி மண்ணை பொன்னாக்கி காட்ட தி.மு.க., புறப்பட்டுள்ளது

புதுச்சேரி மண்ணை பொன்னாக்கி காட்ட தி.மு.க., புறப்பட்டுள்ளது

பாகூர்: புதுச்சேரி மண்ணை பொன்னாக்கி காட்ட தி.மு.க., புறப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்ஜெகத்ரட்சகன் எம்.பி., கூறினார். பாகூர் தொகுதியில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பணியை, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., நேற்று துவக்கி வைத்து, கூறியதாவது; புதுச்சேரி தி.மு.க., வின் கோட்டையாக உள்ளது. தமிழகத்தை போன்று புதுச்சேரி மக்களின் எண்ணங்களை செயல்படுத்தும் வாய்ப்பாக தேர்தல் அமையும். சிறப்பு வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் அநியாயம் செய்கின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் செய்வது, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.பீகாரில் எஸ்.ஐ.ஆர்., மூலமாக ஒரு கோடி பேர் நீக்கப்பட்டுள்ளனர்.இது திராவிட மண், தமிழகம், புதுச்சேரியில் அது நடக்காது. இயற்கை வளம் மிக்க புதுச்சேரி மண்ணை பொன்னாக்கி காட்ட தி.மு.க., புறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லை. இங்கு, என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி தானே. பிரதமர் எல்லா மாநிலத்திற்கும் பல ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுக்கிறார். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கொடுத்து இருக்கலாமே.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக்காக முதல் குரலை தி.மு.க., தான் கொடுக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை