ரத்த தானம் முகாம்
புதுச்சேரி; கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் உயிர்துளி அமைப்பு சார்பில் ரத்த தான முகாம் கடற்கரை சாலையில் நடந்தது.இதற்காக பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் பாண்டிச்சேரி ரத்த மாற்று கழகத்திற்கு சொந்தமான ரத்த வங்கி பஸ் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டது.இதில் புதுச்சேரி கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் 34 பேர் ரத்த தானம் செய்தனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.