கோவில் திருப்பணிக்கு நன்கொடை
புதுச்சேரி : வைத்திக்குப்பம் அங்காளபரமேஸ்வரி கோவில் திருப்பணிக்கு வழக்கறிஞர் குமரன் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி கோவில் திருப்பணி நடந்து வருகிறது. திருப்பணிக்காக முன்னாள் கவுன்சிலர், வழக்கறிஞர் குமரன், ரூ. 1 லட்சம் நன்கொடையை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், கோவில் நிர்வாகிகள் ராமதாஸ், பாரதி, பாரிவேந்தன், வாசு, குமரன், ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த முரளி, மோகனசுந்தரம், குமார் ராஜேஷ், கந்தன், வெங்கடேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.