மேலும் செய்திகள்
மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்
04-Aug-2025
புதுச்சேரி; ரயில் நிலையம் அருகே வெட்டப்பட்டிருந்த இறைச்சியில் சந்தேகம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, நேதாஜி சாலை ரயில் நிலையம் அருகே ஒரு குடும்பத்தினர் பிளாட் பாரத்தில் வசித்தப்படி, மூங்கில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் நாய்கள், பூனை குட்டிகளை வளர்ந்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 8:30 மணிக்கு அவ்வழியாக சென்ற விலங்கு ஆர்வலர் அசோக்ராஜ், அந்த குடும்பத்தினர் ஒரு வகையான இறைச்சியை வெட்டி கொண்டு இருந்ததை பார்த்துள்ளார். மேலும், அந்த இறைச்சியின் வெட்டப்பட்ட கால்களை அங்கு இருந்த நாய்களும், பூனை குட்டிகளும் கடித்து கொண்டிருந்தன. சந்தேகமடைந்த அவர் இறைச்சியை சோதனை செய்தபோது, அது கோழி இறைச்சி இல்லை என்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அசோக்ராஜ், ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், இறைச்சியை கைப்பற்றி, அந்த குடும்பத்தினரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அந்த குடும்பத்தினர் நரி குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் வெட்டி கொண்டிருந்த இறைச்சி பூனைக்கறி என்பதும் தெரியவந்தது. இருப்பினும், இறைச்சியின் மீது சந்தேகம் இருப்பதால், பறிமுதல் செய்த இறைச்சியை சோதனைக்காக வனத்துறைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
04-Aug-2025