உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வரதட்சணை புகார்

ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வரதட்சணை புகார்

புதுச்சேரி: ஐ.பி.எஸ்., அதிகாரி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம், சின்னப்பலம் பகுதியை சேர்ந்தவர் அருண்யா. இவருக்கும், திருவண்ணாமலை கீழ்ச்சுருணை பகுதியை சேர்ந்த ராமன் மகன் ஐ.பி.எஸ்., அதிகாரியான சுபாஷ் என்பவருக்கும், கடந்த 2024ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மாமியார் சுலோச்சனா மற்றும் நாத்தனார் லீலா ஆகியோர் 15 சவரன் நகை மற்றும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடு கேட்டுள்ளனர். ஆனால், அருண்யா வீட்டினர் 6 சவரன் நகை மட்டுமே போட்டுள்ளனர். திருமணத்திற்கு பிறகு இருவரும், புதுச்சேரி துமாஸ் வீதியில், சி.ஐ.டி., வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், சுபாஷ் வீட்டில் இல்லாதபோது, மாமியார் சுலோச்சனா தொடர்ந்து, அருண்யாவை தாழ்த்தி பேசுவது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அருண்யாவின் கல்வி சான்றிதழ்கள், தாலி சங்கிலி மற்றும் உடமைகளை அவரிடம் தராமல் மறுத்துள்ளனர். தொடர்ந்து, அருண்யாவையும், அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 12ம் தேதி அருண்யா, கணவர் சுபாஷின் வீட்டிற்கு வந்தபோது, அவரை உள்ளே அனுமதிக்காமல் பூட்டி சென்றுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பின் கல்வி சான்றிதழ்கள் மட்டும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதுச்சேரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கணவர், மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அருண்யா புகார் அளித்தார். அதன் பேரில், சுபாஷ், சுலோச்சனா மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். யார் இந்த சுபாஷ்? திருவண்ணாமலை மாவட்டத்தை சுபாஷ், புதுச்சேரி போலீஸ் சர்வீஸ் அதிகாரியாக ஐ.ஆர்.பி.என்., துணை கமாண்டன்ட் ஆக இருந்தார். சீனியர் கிரேடு ஆபிசரான சுபாஷ் ஐ.பி.எஸ்., ஆக உயர்வு பெற்று தற்போது டில்லியில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ