மேலும் செய்திகள்
கச்சிராயபாளையத்தில் ஒரு மணி நேரம் டிராபிக் ஜாம்
18-Sep-2026
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் அருகே சாலையில் அருவிபோல் பீறிட்டு தண்ணீர் கொட்டியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில இருக்கிற ரெட்டியார்பாளையம் ஜெயா நகரை நேற்றிரவு 7 மணியளவில் கடந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சி. பொதுப்பணித் துறை குடிநீர் பைப்பு ஒன்னு திடீர்னு உடைந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிக்கித் தவித்தது. உடன் அப்பகுதி மக்கள் உடைப்பை சரி செய்ய களத்தில் இறங்கினர். ஆனால் தண்ணீரில் வேகத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த காலத்துல, லிட்டர் கணக்கில் குடிநீர் இப்படி வீதியில வீணாகுறதை பார்த்தா வேதனையாக உள்ளதாக அவ்வழியாக கடந்து சென்ற பொதுமக்கள். இனிமேலாவது பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஸ்லோ மோஷன்ல வரமால், கொஞ்சம் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி அந்த உடைப்பை உடனே சரி செய்ய வேண்டும்.
18-Sep-2026