உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்திரைப்பாளையத்தில் குடிநீர் கட்

முத்திரைப்பாளையத்தில் குடிநீர் கட்

புதுச்சேரி: பராமரிப்பு பணிகள் நடப்பதால் (25ம் தேதி) முத்திரைப்பாளையம் பகுதியில் குடிநீர் வினியோகம் தடைபடும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித் துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முத்திரைப்பாளையத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சுத்தம் செய்யும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், இன்று (25ம் தேதி) காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை முத்திரைப்பாளையம், மேட்டுப்பாளையம், சாணாரப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியாகம் தடைபடும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி