உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குழந்தை இல்லாததால் டிரைவர் தற்கொலை

குழந்தை இல்லாததால் டிரைவர் தற்கொலை

வில்லியனுார்: வில்லியனுார் அருகே குழந்தை இல்லை என்பதால் மனமுடைந்த டிரைவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.வில்லியனுார் அடுத்த முத்துப்பிள்ளைபாளையம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜேஷ்குமார், 28; கார் டிரைவர். இவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், அன்னபூரணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதுவரை குழந்தை இல்லாததால், ராஜேஷ்குமார் குடிப்பழத்திற்கு அடிமையானார். தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் சில தினங்களுக்கு முன், மனைவி அன்னபூரணி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதில், மனமுடைந்த ராஜேஷ்குமார், நேற்று வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை