உள்ளூர் செய்திகள்

டிரைவர் தற்கொலை

புதுச்சேரி: கடன் பிரச்னையில் கார் டிரைவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் தர்பிலன், 35. இவரது மனைவி மகளிர் குழு மூலம் தர்பிலனுக்கு கடன் வாங்கி கொடுத்தார். மாதம் கட்ட வேண்டிய குழு பணத்தை கட்ட முடியாமல் இருந்ததால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் தர்பிலன் நேற்று வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனார். இதுகுறித்து, அவரது மனைவி, மொபஷீரா காத்துன் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ