மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த போதை நபர் சாவு
காரைக்கால்: திருநள்ளாறு தேனுார், தெற்கு தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன், 38; கொத்தனார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த 18ம் தேதி இரவு வீட்டில் மது அருந்திவிட்டு மாடிப்படி ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். படு காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். நாளடைவில் காயம் அதிகரித்து, காலில் வீக்கமும் வலியும் ஏற்பட்டதால் கடந்த 23ம் தேதி அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்ட மகேந்திரன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுக்குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.