உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதைப்பொருள் விழிப்புணர்வு

போதைப்பொருள் விழிப்புணர்வு

புதுச்சேரி; புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில், இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் முதுகலைக் கழகத்துடன் இணைந்து, போதைப்பொருள் மற்றும் மனநலம் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சமுதாய கல்லுாரி கருத்தரங்க கூடத்தில் நடத்தின. பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சுரேஷ்குமார் வரவேற்றார். இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் முதுகலைக் கழகத்தின் உளவியல் மருத்துவர்கள் அரவிந்த், ராஜா ஆகியோர் போதைப்பொருள் அடிமைத் தன்மையின் உளவியல் தாக்கங்கள், தடுப்பு உத்திகள் மற்றும் மனநல பிரச்னைகளுக்கு ஆரம்பத்திலேயே கவனம் செலுத்துவதன் அவசியம் குறித்து விளக்கினர்.கணினி அறிவியல் துறை பேராசிரியர் லதா பார்த்திபன் கருத்துரை வழங்கினார்.தொடர்பியல் துறை மாணவி லட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.விழிப்புணர்வு நிகழ்ச்சியில், போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ