மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
5 hour(s) ago
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது.பள்ளி முதல்வர் கேசவ் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் எழில்வேந்தன் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் தில்லைக்கண்ணு காமராஜ் முன்னிலை வகித்தார். நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர் ஹெலன், மருத்துவர் சூரியகுமார் ஆகியோர் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினர்.செவிலியர் செல்வமணி, ஆஷா பணியாளர் மாலதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் போதை உறுதி மொழி எடுக்கப்பட்டு, தொடர்ந்து மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.போதை ஒழிப்பு செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள் நன்றி கூறினார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago