மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் மாணவர்கள் துாய்மை பணி
29-Sep-2024
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் தனியார் பள்ளியில் போலீசார் சார்பில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் கற்றல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில்,திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டு, போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கற்றல் வழிகாட்டுதல் தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.மேலும், போக்சோ சட்டம் மற்றும் பெண் குழந்தைகள், மகளிர்களுக்கான பாதுகாப்பு சட்டப்பிரிவுகள் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.இதில், பள்ளியின் நிறுவனர் பாஸ்கரன், உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள்,மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
29-Sep-2024