போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு போட்டி
திருபுவனை : மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதைப் பொருள் தடுப்பு தினத்தையொட்டி, திருபுவனை காவல் நிலையத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இரண்டாம் கட்டமாக மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்துவிழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. இதில், வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.பள்ளி துணை முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் அறிவழகி முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் அமல்ராஜ் ஜார்ஜ் சேவியர் வரவேற்றார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் பரிசு வழங்கி, போதைப்பொருள் தடுப்பு குறித்து பேசினார். விரிவுரையாளர் தமிழ்செல்வி நன்றி கூறினார்.