உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதைப் பொருள் தடுப்பு முகாம் 

போதைப் பொருள் தடுப்பு முகாம் 

புதுச்சேரி: அபிஷேகப்பாக்கம், சேத்திலால் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான நன்னெறி பயிற்சி மற்றும் போதைப்பொருள் தடுப்பு முகாம் நடந்தது. ஆசியர் லட்சுமி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் டார்லிங் வின்சி இந்திரா முகாமை துவக்கி வைத்தார். இளவேங்கை, சிலம்பொலி முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பத் கலந்து கொண்டு மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார். எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி பங்கேற்று, தன்னம்பிக்கை, திறன்கள் மேம்பாடு, தாழ்வு மனப்பான்மையால் ஏற்படும் தடைகள், முடிவெடுக்கும் ஆற்றல், போட்டித் தேர்வுகளை எழுதும் முறைகள், பேச்சுக் கலை, தலைமைப் பண்பு, மது, போதை மற்றும் திரைக்கவர்ச்சியால் ஏற்படும் கவன சிதறல்உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தார். ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ