மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
21-Dec-2025
புதுச்சேரி: புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம், உதவிக் கரங்கள் இயக்கம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான குழந்தை திருமணம், போக்சோ சட்டம் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், ஆசிரியர் அருண் நாகலிங்கம் வரவேற் றார். ரோட்டரி கிளப் துணை கவர்னர் அருண் தீப்பாஞ்சான் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பரிமளம் தலைமைத் தாங்கினார். பு துச்சேரி அரசின் சிறுவர் நலக்குழு முன்னாள் உறுப்பினர் எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி மற்றும் கண்ணகி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் மாயவன் ஆகியோர் கலந்து கொண்டு போதைப் பொருள் தடுப்பு, கல்வி மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பே சினர். கண்காணிப்பாளர் லோகநாதன் நன்றி கூறினார். நிறைவாக, மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நடந்தது.
21-Dec-2025