உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு 56 வாகனங்களை இயக்க அனுமதி மறுப்பு

கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு 56 வாகனங்களை இயக்க அனுமதி மறுப்பு

புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம் நேற்று நடந்தது.மேட்டுப்பாளையம் சரக்கு ஊர்தி முனையத்தில் நடந்த முகாமை கலெக்டர் குலோத்துங்கன் துவக்கி வைத்து பார்வையிட்டார். போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், துணை போக்குவரத்து ஆணையர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில், ஆட்டோமொபைல் செயற்பொறியாளர் சீத்தாராம ராஜ், வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகர ராவ், அங்காளன் உள்ளிட்ட போக்குவரத்து துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.வாகன ஆய்வாளர்கள், உதவி வாகன ஆய்வாளர்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.அதில், வாகனத்தின் தகுதிச் சான்றிதழ், காப்பீடு, பர்மிட், புதுப்பிக்கப்பட்ட முதலுதவி பெட்டி, தீ அணைப்புக் கருவி, ஜன்னல்களில் கிடைமட்ட கிரீல்கள், அவசரகாலத்தில் வெளியேறும் கதவு, வேக கட்டுபாட்டு கருவி, ஜி.பி.எஸ்., கருவி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.குழந்தைகள் மற்றும் மாணவியர் பயணிக்கும் பஸ்களில் கண்டிப்பாக பெண் நடத்துநரை நியமிக்க கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.இதில், 295 கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 239 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் அளிக்கப்பட்டது. 56 வாகனங்கள் சோதனையில் தகுதி பெறவில்லை. இந்த வாகனங்கள் சாலையில் பயணித்தால், பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி