உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குட்டையில் மூழ்கி முதியவர் சாவு

 குட்டையில் மூழ்கி முதியவர் சாவு

புதுச்சேரி: மீன் குட்டையில் மூழ்கி முதியவர் இறந்தார். தொண்டமாநத்தம், முதல் தெருவைச் சேர்ந்தவர் விக்டர், 68. வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு அடிக்கடி மயக்கம் வருவது வழக்கம். அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வழுதாவூர் சாலையில் உள்ள ஒரு சர்ச்சுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை வீட்டின் அருகில் உள்ள மீன்குட்டையில் விக்டர் இறந்த கிடந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !