உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதியவர் கொலை வழக்கு: பெண் சிறையில் அடைப்பு

முதியவர் கொலை வழக்கு: பெண் சிறையில் அடைப்பு

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டில் நிலத்தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு பிள்ளையார் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் பரசுராமன், 80; விவசாயி. இவருக்கும் அதேப் பகுதியை சேர்ந்த கோபி என்பவருக்கும் இடையே நிலப் பிரச்னை தொடர்பாக, கடந்த 31ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டது.கோபி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரசுராமன் மற்றும் அவரது மகன் விஜயன் ஆகியோரை குத்தினார். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இது குறித்த புகாரின்பேரில், கோபி, 39, மற்றும் அவரது மனைவி அம்பிகா, 35; ஆகியோர் மீது திருக்கனுார் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து, கோபியை கடந்த 1ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதற்கிடையே, ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டிருந்த பரசுராமன், கடந்த 5ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த கோபியின் மனைவி அம்பிகாவை, 35; போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை