உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எலக்ட்ரீஷியன் மர்ம சாவு? கொலையா என விசாரணை

எலக்ட்ரீஷியன் மர்ம சாவு? கொலையா என விசாரணை

பாகூர் : பாகூர் அருகே குளத்தில் இறந்து கிடந்த ஆண் நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாகூர் அடுத்த நிர்ணயப்பட்டு ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் உள்ள குளத்தில் நேற்று காலை 8 மணி அளவில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்தது. தகவலறிந்த பாகூர் சப் இன்ஸ்பெக்டர்கள் நந்தக்குமார், சந்திரசேகர், ஏட்டு ஹமீது உசேன் மற்றும போலீசார் விரைந்து சென்று, உடலை மீட்டனர். அதில், இறந்தவர் கழுத்தில் கர்ச்சீப்பால் இருக்கி, நாக்கு வௌியே தள்ளிய நிலையில் இருந்தது. மேலும், அவரது சட்டை பையில் எலக்ட்ரிக்கல் டெஸ்டர், லைட்டர் இருந்தது. உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில், இறந்தவர் தமிழக பகுதியான அனிச்சக்குப்பத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் செந்தில்குமார், 42; என்பதும் மனைவி பிரிந்து சென்ற நிலையில் தனியாக வசித்து வந்தார். பாகூர் அருகே உள்ள நிர்ணயப்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அவ்வாறு கடந்த 11ம் தேதி இரவு நிர்ணயப்பட்டு கிராமத்திற்கு வந்து செந்தில்குமார் அங்குள்ள குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.இதுகுறித்து பாகூர் போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிந்து, செந்தில்குமாரை, யாரேனும் கழுத்தை நெறித்து கொலை செய்தனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி