உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெங்களூருவில் 26ம் தேதி மின் நுகர்வோர் மாநாடு

பெங்களூருவில் 26ம் தேதி மின் நுகர்வோர் மாநாடு

புதுச்சேரி: அகில இந்திய மின் நுகர்வோர் சங்கம் சார்பில், தென் மாநிலங்களுக்கான மின்சார நுகர்வோர் மாநாடு வரும் 26ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது. இதுகுறித்து, சங்க செயலாளர் சிவக்குமார் கூறியதாவது: புதுச்சேரி அரசு மின் துறையை தனியாருக்கு தாரை வார்த்து, ஸ்மார்ட் மீட்டரை பொருத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை அரசு உயர்த்தி வருகிறது.ரூ. 27 கோடி ஊழல் செய்துள்ளதாக மத்திய தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளது கண்டனத்துக்குரியது. அரசு மின் துறையை தனியாருக்கு விற்பது சம்பந்தமாக சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களின் கருத்தை கேட்கவில்லை. பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலேயே விற்று விட்டனர். மின்துறை தனியாருக்கு விற்பது சம்பந்தமாக சென்னை, உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதுகுறித்து முதல்வர், மின்துறை அமைச்சரிடம் பல்வேறு அமைப்புகள், மின்துறை ஊழியர்கள் தனியாருக்கு விற்க கூடாது என பலமுறை வலியுறுத்தியும், அரசு தனியாருக்கு விற்று இருப்பது மக்களுக்கு செய்துள்ள துரோகம். தனியாருடனான ஒப்பந்தத்தில் 49 சதவீதம் அரசும், 51 சதவீதம் தனியார் கையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, மின்துறையை அரசு தொடர்ந்து நடத்த வேண்டும். தனியாருக்கு அளிக்கக் கூடாது என வலியுறுத்தி, அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் சார்பில் தென் மாநிலங்களுக்கான மின்சார நுகர்வோர் மாநாடு வரும் 26ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது. மாநாட்டில் புதுச்சேரி அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கத்தின் 10பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்' என்றார். பேட்டியின்போது கமிட்டி உறுப்பினர் சண்முகம் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை