ஆட்டோ ஓட்டுனர்களுக்கான அவசரகால முதலுதவி பயிற்சி
புதுச்சேரி; ஆட்டோ ஓட்டுநர்களுக்கான அவசரகால முதலுதவி பயிற்சி முகாம் போக்குவரத்து துறை அலுவலகத்தில் நேற்று துவங்கியது.புதுச்சேரி, அலர்ட் அமைப்பு மூலம் பள்ளி, கல்லுாரி மற்றும் பொது மக்களின் நேரடி தொடரில் உள்ளவர்களுக்கு ஒரு நாள் மற்றும் இரண்டு நாள் அவசர கால முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதலியார்பேட்டை போக்குவரத்து துறை அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான 2 நாள் மேம்பட்ட அவசரகால முதலுதவி பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.முகாமை போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி துவக்கி வைத்து, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.இதில், ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம், அலர்ட் அமைப்பு சேர்மன் மணநாதன், செயலாளர் ஜனா மாறன், நிர்வாகிகள் நடேசன், ராஜ்குமார், தையல்நாயகி, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரியின் டாக்டர் ஹோமந்த் தலைமையிலானமருத்துவக் குழுவினர்உட்பட பலர் கலந்து கொண்டனர்.முகாமில் பங்கேற்ற 50 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அலர்ட் பயிற்சியாளர் காரல் மார்க்ஸ், அவசர கால முதலுதவி குறித்து பயிற்சி அளித்தார். இதில், பயிற்சி பெறுபவர்களுக்கு இன்று (16ம் தேதி) முதலுதவி மருத்துவ உபகரணங்கள் மற்றும் சீருடை வழங்கப்படுகிறது.