மேலும் செய்திகள்
திருவள்ளூரில் இரண்டு நாள் ஆட்சிமொழி பயிலரங்கம்
14-Aug-2025
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கைத்தொழில் பயிலரங்கம்
07-Aug-2025
புதுச்சேரி,:புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை மற்றும் அலர்ட் அறக்கட்டளை சார்பில், நான்கு நாட்கள் அவசரகால மேம்பட்ட முதலுதவி பயிற்சி பயிலரங்கு நடந்தது. கருத்தரங்க கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், போக்குவரத்து சீனியர் எஸ்.பி., நித்தியா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். பயிலரங்கில் போலீசார் கலந்து கொண்டனர். அலர்ட் நிறுவன புதுச்சேரி தலைவர் மணநாதன், துணைத் தலைவர் சையத் சாஜித் அலி, பொதுச் செயலாளர் தங்க மணிமாறன் ஆகியோர் பயிலரங்கை துவக்கி வைத்தனர். பயிலரங்கில் விபத்து காலத்தில் சரியான முதலுதவி வழங்குவது குறித்து மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி மருத்துவர்களின் மேற்பார்வையில் 160க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசாருக்கு பயிற்சியளிக்கப்பட்டது. பயிலரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது.
14-Aug-2025
07-Aug-2025