உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரில் மயங்கி விழுந்த ஊழியர் பலி 

பாரில் மயங்கி விழுந்த ஊழியர் பலி 

புதுச்சேரி : புதுச்சேரியில் பாரில் மயங்கி விழுந்த ஊழியர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். திலாஸ்பேட்டை, தேரோடும் வீதியை சேர்ந்தவர் முருகேசன், 65. இவர் 45 அடி ரோட்டில் உள்ள தனியார் பாரில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் பாரில் வேலை செய்து கொண்டிருந்த முருகேசன், திடீரென மயங்கி விழுந்தார். தகவலறிந்த அவரது மகன் ரஞ்சித்குமார், தனது நண்பருடன் பாருக்கு சென்று, மயங்கி கிடந்த முருகேசனை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, டாக்டர் பரிசோதித்து முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை