உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு; ரூ.1.12 கோடி இழந்த இன்ஜினியர்

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு; ரூ.1.12 கோடி இழந்த இன்ஜினியர்

புதுச்சேரி: வெளிநாட்டில் வேலையும் இன்ஜினியர் போலி ஆன்லைன் வர்த்தகத்தில் 1.12 கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜ்மோகன். சீனாவில் உள்ள கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்தார். சொந்த ஊர் வந்த இவரை சில மாதங்களுக்கு முன் வாட்ஸ் ஆப்பில், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வது தொடர்பான குழுவில் இணைந்தார். ஆன்லைன் வர்த்தகத்தில் எவ்வாறு முதலீடு செய்யலாம் என வகுப்புகள் எடுக்கப்பட்டுள்ளது.அதை நம்பிய ராஜ்குமார், பல்வேறு தவணைகளாக 1 கோடியே 12 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வரை ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, ஏமாந்தார்.பாகூரை சேர்ந்த நிவேதா என்பவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர் பகுதி நேர வேலையாக வீட்டில் இருந்தே ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். இதைநம்பிய நிவேதா, 5 லட்சத்து 6 ஆயிரத்து 800 ரூபாய் அனுப்பி ஏமாந்துள்ளார்.இதேபோல், முருங்கப்பாக்கம் அபிஷா 83 ஆயிரத்து 500 ரூபாய், முத்திரையர்பாளையம் வெங்கடேஷ் 8 ஆயிரத்து 700, தியாகராஜ வீதி லட்சுமி 8 ஆயிரத்து 100, காரைக்கால் ஷாலினி 24 ஆயிரம், மூலக்குளம் முருகேசன், 7 ஆயிரத்து 500, நல்லவாடு மகாராஜா 6 ஆயிரத்து 500, ரெட்டியார்பாளையம் சாந்தி 8 ஆயிரத்து 600 ரூபாய் என 9 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 1 கோடியே 19 லட்சத்து 18 ஆயிரத்து 700 ரூபாய் ஏமாந்தனர். சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ