மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி நிறைவு
12-Apr-2025
புதுச்சேரி : ஆங்கில திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியின் நிறைவு விழா நடந்தது.டிஷா பவுண்டேஷன், இ.எல்.எப்., இங்கிலீஷ் ஆகிய அமைப்புகள், ஐ.டி.பி.ஐ., வங்கி ஆதரவுடன் ஆங்கில திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி 205 அரசு பள்ளிகளில் நடந்தது. 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயனடைந்தனர்.நிகழ்ச்சியின் நிறைவு விழா, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. பள்ளிக் கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குநர் பிரியதர்ஷினி, பெண்கள் கல்வி துணை இயக்குநர் ராமச்சந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் குலசேகரன், சமக்கரா சிக் ஷா திட்ட இயக்குநர் தினகரன் மற்றும் பள்ளி கல்வி ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் முன்னிலை வகித்தனர்.சிறப்பாக செயல்பட்ட பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வெளிப்படுத்தும் வகையில் ஆங்கில வாக்கியங்கள் படித்தல், சொற்களை படித்தல், பொருள்களைப் பற்றி விவரித்தல் போன்ற பல நிகழ்ச்சி காட்சிப்படுத்தப் பட்டன.சிறப்பு விருந்தினர் புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன், மாணவர்களின் ஆங்கிலத் திறனை பாராட்டி 5 வட்டத்திற்குட்பட்ட 14 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி பாராட்டினார்.
12-Apr-2025