உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி நிறைவு விழா

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி நிறைவு விழா

புதுச்சேரி: காலாப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் திக் ஷா பவுண்டேஷன், இ.எல்.எப்., சார்பில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடந்து வந்தது.அதன் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு, கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தாார். தலைமை ஆசிரியர் கனிமொழி பிரேம் வரவேற்றார்.கல்வித்துறை வட்டம்-1, பள்ளித் துணை ஆய்வாளர் அனிதா வாழ்த்தி பேசினார். இதில் கலெக்டர் குலோத்துங்கன் வகுப்பு வாரியாக மாணவர்களுடன் கலந்துரையாடி, ஆங்கிலத் திறனை ஆய்வு செய்து பாராட்டினார்.விழாவில், ஆசிரியர்கள் சிவசங்கரி, சித்ரா, ஜமுனா ராணி, ஸ்ரீ விஜயசேகரி, சரஸ்வதி, சந்தியா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி