உள்ளூர் செய்திகள்

சமத்துவ வளைகாப்பு

புதுச்சேரி: புதுச்சேரி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமத்துவ வளைகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடந்தது. முத்தியால்பேட்டை தொகுதி, தனியார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த 48 கர்ப்பிணிகள் பங்கேற்று பயனடைந்தனர். விழாவில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, ஆரத்தி எடுத்து, சீர்வரிசையுடன் வளைகாப்பு நடந்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !