உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமத்துவ பொங்கல் விழா: தி.மு.க., கொண்டாட்டம்

சமத்துவ பொங்கல் விழா: தி.மு.க., கொண்டாட்டம்

திருக்கனுார்: புதுச்சேரி மாநில தி.மு.க., சார்பில் திருக்கனுாரில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவை, மாநில அமைப்பாளர் சிவா துவக்கி வைத்தார்.மண்ணாடிப்பட்டு தொகுதி, திருக்கனுார் முத்து மாரியம்மன் கோவில் திடலில் நடந்த விழாவிற்கு, மாநில துணை அமைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில்வேலன், செந்தில்குமார், தொகுதி அவைத்தலைவர் மண்ணாங்கட்டி முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் கலைவாணன் வரவேற்றார்.கிராமிய இசை, மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் 300க்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழாவை, மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, பெண்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கினார். கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன் வாழ்த்தி பேசினார். விழாவில் மாநில அவைத் தலைவர் எஸ்.பி., சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், துணை அமைப்பாளர் தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சன் குமரவேல், லோகையன், ஆறுமுகம், காந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், செல்வநாதன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை புதுச்சேரி மாநில தி.மு.,க., வுடன் மண்ணாடிப்பட்டு தொகுதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை