மரியாள் நகரில் சமத்துவ பொங்கல்
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம், மரியாள் நகர் 4 வது சாலை குடியிருப்போர் நலவாழ்வு சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அதனையொட்டி, கடந்த 11ம் தேதி காலை கோலப்போட்டி நடந்தது. தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. மதியம் முதியோர்களுக்கான உறியடி போட்டி நடைபெற்றது. அதில், முதியோர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாலை நடந்த சமத்துவ பொங்கலில்நகரை சேர்ந்தவர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நகர குடியிருப்போர் நல்வாழ்வு சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.