உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏனாம் சிறையில் தப்பியவர் காக்கிநாடாவில் கைது

ஏனாம் சிறையில் தப்பியவர் காக்கிநாடாவில் கைது

புதுச்சேரி : ஏனாம் சிறையில் இருந்து தப்பி சென்றவரை காக்கிநாடாவில் போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியில், ஏனாம் பிராந்தியத்திற்கு உட்பட்ட, கணகலாப்பேட்டை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு, 30. இவர் கடந்த 14ம் தேதி, தங்க வளையல் திருடிய வழக்கில் ஏனாம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நேற்று ஏனாம் துணை சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், ஏனாம் சிறையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அங்கு வெள்ளையடிக்க வைக்கப்பட்டிருந்த ஏணியில் ஏறி வெங்கடேஸ்வரலு தப்பினார். போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர்.ஒரு வழியாக களைத்து போன போலீசார், ஆந்திர மாநிலம் காக்கி நாடா ரயில் நிலையத்தில், இரவு, ரயில் ஏறுவதற்கு நின்ற போது, அவரை கண்டுபிடித்தனர். அவரை மீண்டும் ஏனாம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி