மேலும் செய்திகள்
திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
27-Jan-2025
புதுச்சேரி: புதுச்சேரி தமிழ் சங்க வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட 6ம் ஆண்டு விழாவையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். போலீஸ் டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில், செயலர் சீனு மோகன்தாசு, பொருளாளர் அருள் செல்வம், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்மாமணி உசேன், கலைமாமணி ராசா, சிவேந்திரன், ஆனந்தராசன், அருள்ராஜ், இளங்கோவன், குமரவேல், பரசுராமன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
27-Jan-2025