மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலண்டர் விநியோகம்
03-Jan-2025
புதுச்சேரி: புதுசாரம், எஸ்.ஆர்.எஸ்., அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில், 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, மாலை நேர சிற்றுண்டி வழங்கும் துவக்க விழா நடந்தது.பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில்,தலைமை ஆசிரியை அனிதா தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் குழுவின் சார்பில் முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை வரவேற்றார்.தொடர்ந்து, மாணவ மாணவியர் அனைவருக்கும் தலா 2 பொரி அரிசி உருண்டைகள் வழங்கப்பட்டது. இதேபோன்ற இயற்கை சிற்றுண்டிகள் சிறப்பு வகுப்பு நடக்கும் அனைத்து நாட்களுக்கும் முன்னாள் மாணவர்கள் சார்பில் வழங்கப்பட உள்ளது.நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் கணேசன், முரளி, ரகுராமன், பாக்யராஜ், மகாலிங்கம், ஜோதி, லட்சுமி, மனோரஞ்சிதம், மாரியம்மாள், லக்ஷ்மி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஆசிரியர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.
03-Jan-2025