உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் கலெக்டர்  மறைவு

முன்னாள் கலெக்டர்  மறைவு

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் கலெக்டரான சுப்பராயபிள்ளை இயற்கை எய்தினார்.புதுச்சேரி நெல்லித்தோப்பு, தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் சுப்பராயபிள்ளை, 93, இவர், பிரெஞ்சு ஆட்சிக்கு பின், புதுச்சேரி கலெக்டராகவும், தேர்தல் ஆணையராகவும், பணியாற்றினார்.சிறந்த நிர்வாகியாக, அரசின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ள அவர், கடந்த 16ம் தேதி, இயற்கை எய்தினார்.அவரது உடல், இன்று 18ம் தேதி, நெல்லித்தோப்பு தந்தை பெரியார் நகர், தியாகராஜா அபார்ட்மெண்ட்டில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின் மாலை, 5:00 மணியளவில் இறுதி ஊர்வலமாக புறப்பட்டு பவழக்காரன்சாவடி இடுகாட்டில், தகனம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை