உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறப்பான பட்ஜெட்; முதல்வர் ரங்கசாமி பாராட்டு

சிறப்பான பட்ஜெட்; முதல்வர் ரங்கசாமி பாராட்டு

புதுச்சேரி : சிறப்பான பட்ஜெட்டினை தாக்கல் செய்தற்கான பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்தனர்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:2025-26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையானது,மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்துள்ளது. நாட்டின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3 இலட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி கடனுதவியை அதிகரித்திருப்பது மற்றும் ஆண்டொன்றுக்கு 12.7 லட்சம் டன் உர உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பது போன்றவை விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த உதவும்.கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் இணைய வசதி மற்றும் ரூ. 500 கோடி செலவில் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு மையம் அமைத்தல் போன்றவை இந்தியாவில் கல்வி மற்றும் மருத்துவத்தை டிஜிட்டல் முறைக்குக் கொண்டு செல்லும்.. ஐந்து ஆண்டுகளில், 75,000 மருத்துவ இடங்களைச் சேர்க்கும் இலக்கை நோக்கி, வரும் ஆண்டில், மருத்துவக் கல்லுாரிகளில் கூடுதலாக 10,000 இடங்கள் சேர்த்தல், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல் நேர புற்று நோய் மையங்கள் அமைத்தல் மற்றும் 2025-26ம் ஆண்டில் 200 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைத்தல் போன்ற அறிவிப்புகள் இந்திய சுகாதாரத்தை மேம்படுத்தும்.லித்தியம் பேட்டரிக்கான வரி குறைப்பால் மின்சார வாகனங்கள் மற்றும் மொபைல் போன்களின் விலை குறையும். நாட்டின் நலனுக்கேற்ற பல்வேறு சிறப்பு அம்சங்களைக்கொண்ட இந்த பட்ஜெட்டினை சமர்ப்பிக்க வழிகாட்டுதலாக இருந்த பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பான பட்ஜெட்டினை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டுக்கள்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி