உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவு

 மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு பிரதமர் வருகையையொட்டி இ.சி.ஆரில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால்துறை தாசில்தார் ராஜேஷ் கண்ணா உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ​புதுச்சேரிக்கு இன்று 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். இதையொட்டி, புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள அனைத்து​ சாராயக் கடைகள், ​மதுபானக் கடைகள், ​சுற்றுலா அந்தஸ்து கொண்ட ஓட்டல்கள், உணவகங்கள், இன்று காலை முதல் மதியம் 2:30 மணி வரை கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும். அரசின் இந்த உத்தரவை மீறி கடைகளை திறப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மதியம் 2:30 மணிக்கு மேல் மதுக்கடைகள் மற்றும் உணவகங்கள் வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை