உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் மத்திய சுகாதார திட்டம் விரிவாக்கம்! 36 ஆயிரம் பென்ஷனர்கள் பயன்பெறுவர்

புதுச்சேரியில் மத்திய சுகாதார திட்டம் விரிவாக்கம்! 36 ஆயிரம் பென்ஷனர்கள் பயன்பெறுவர்

புதுச்சேரி ; மத்திய சுகாதார திட்டம், புதுச்சேரியில் உள்ள பென்ஷன்தாரர்கள்,குடும்ப பென்ஷன்தாரர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும் 75 நகரங்களில் 460 நலவாழ்வு மையங்கள் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கென மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 41.2 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த சுகாதார திட்டத்தின் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், புதுச்சேரியை சேர்ந்த பென்ஷன்தாரர்களும், குடும்ப பென்ஷன்தாரர்களும் தற்போது இணைக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை புதுச்சேரி அரசு, சகாதார துறை வாயிலாக பிறப்பித்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தினை பொருத்தவரை, கடந்த காலங்களில் பென்ஷன்தாரர்கள் முதலில் மருந்துவ செலவினை செய்துவிட்டு, பிறகு அதனை குறிப்பிட்ட சதவீதம் அதில், திரும்ப பெறும் நடைமுறை இருந்து வந்தது. அதன் பிறகு, மாநில அரசு பென்ஷன்தாரர்களின் மருத்துவ செலவினை தனியார் காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தி வந்தது. இதற்கான காப்பீட்டு தொகையும் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.ஆனால், ஓய்வூதியதாரர்கள் இந்த திட்டத்தில் இணைய அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. பல்வேறு தனியார் மருத்துவ சுகாதார திட்டத்தில் இணைந்து சிகிச்சை பெற்றனர். இதன் காரணமாக, இந்த திட்டம் முடிந்த பிறகும் ஓய்வூதியதாரர்களுக்கு வேறு மருத்துவ ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தான், மத்திய சுகாதார திட்டம், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் விரிவாக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

நிபந்தனை என்ன

ஓய்வூதியதாரர்கள் சி.ஜி.எச்.எஸ்., வசதிகளைப் பெற விரும்பினால், அவர்கள் சேவையின் போது அவர்களுக்கு உரிமையான சம்பள தரத்தின் அடிப்படையில் ஒரு பங்களிப்பைச் செய்ய வேண்டும். அதே நேரத்தில், மத்திய சுகாதார திட்டத்தின் கீழ், இணைய வேண்டும் என்றால் அரசின் இதர சுகாதார திட்டத்தின் கீழ் சேர்ந்து இருக்க கூடாது என்பது நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.தற்போது ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவிற்காக 1,000 ரூபாய் சேர்த்து தரப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் சேரும்போது இந்த தொகையை இழக்க வேண்டி இருக்கும். இதற்கான ஒப்புதலை பென்ஷன்தாரர்கள் அளித்து சேர வேண்டி இருக்கும். அதையடுத்து, மத்திய சுகாதார திட்டத்தில் சேர்ந்தற்கான அடையாள அட்டையும் வழங்கப்படும். அதை தொடர்ந்து அரசுடன் இணைந்துள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். இத்திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள 36,638 பேர் பயனடைவர் என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ