அரவிந்தர் கல்லுாரியில் கண் மருத்துவ முகாம்
புதுச்சேரி: சேதராப்பட்டு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் சிவ சங்கரி தலைமை தாங்கினார். முகாமில் கண் மருத்துவர் குழு பொதுமக்களுக்கு கண் பார்வை குறைபாடு, கண் எரிச்சல், துார பார்வை மற்றும் பார்வை சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர். முகாமில் பேராசிரியர்கள், கல்லுாரி மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்ட னர்.