உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கண்தானம் வழங்கும் நிகழ்ச்சி

கண்தானம் வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி: வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சார்பில், கண்தானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வில்லியனுார், வீரவாஞ்சி நகர் பலராமன் வீதி, வினோவின் தாய் ஞானம், 77; ஓய்வு பெற்ற தலைமை செவிலி அதிகாரி. உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று இறந்தார். இவரது கண்களை குடும்பத்தினர் கண்தானம் செய்ய முன் வந்தனர்.அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் சுமிதா, சமீர் நுார், தலைமையில் செவிலியர்கள் கீர்த்தி, ஹரிக்கா, தீபிகா உள்ளிட்டோர் கருவிழிகளை சேகரித்தனர்.வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை தலைமையில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சேர்மன் லட்சுமிபதி, நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமன், அய்யனார், முன்னிலையில் ரத்த தானம், கண்தானம் உடல் உறுப்பு தானம், உடல் தானம் பதிவு மற்றும் ஆலோசகர் கந்தசாமி தேசிய விருத்தாளர் பங்காரு அம்மா, கிராமப்புற செவிலியர் விஜயலட்சுமி, இருசப்பன், ஆஷா பணியாளர் சுந்தரி, தன்னார்வலர்கள் ரஜினி முருகன், வெங்கடேசன் முன்னிலையில், கண்களை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி