உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் மீது வாகனம் மோதிய விபத்தில் விவசாயி பலி

பைக் மீது வாகனம் மோதிய விபத்தில் விவசாயி பலி

பாகூர் : கடலுார் மாவட்டம் சேடப்பாளையம் அடுத்துள்ள எஸ்.புதுாரைச் சேர்ந்தவர் பழனிவேல், 57; விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை, அதே பகுதி நண்பர் ஆறுமுகம் என்பவருடன் பைக்கில் பாகூரில் இருந்து கடலுார் சென்றார். பைக்கை ஆறுமுகம் ஓட்டினார்.விழுப்புரம் - நாகப்பட்டினம் சாலை சோரியாங்குப்பம் தென்பெண்ணையாறு மேம்பாலம் அருகே சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் துாக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பழனிவேல் இறந்தார். ஆறுமுகம் சிகிச்சை பெற்று வருகிறார்.புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ