பாஸ்ட் புட் தயாரிப்பு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி: பாஸ்ட் புட் தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. புதுச்சேரி லெனின் வீதி இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, இலவச பாஸ்ட் புட் தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. புதுச்சேரியை சேர்ந்த 18 முதல் 49 வயது வரை உள்ள ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். 10 நாட்கள் பயிற்சியில் உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பிக்க அடுத்த மாதம் 1ம் கடைசி நாளாகும். பயிற்சி 2ம் தேதி துவங்குகிறது. மேலும், 8870497520, 0413 2246500 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.