உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேன் மோதி தந்தை பலி; மகள் காயம்

வேன் மோதி தந்தை பலி; மகள் காயம்

காரைக்கால்: காரைக்கால், அருள் நகர் அன்னுசாமி வாய்க்கால் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன், 52; தனியார் வங்கி ஊழியர். இவர் நேற்று காலை தனது மகள் லக்க்ஷிதாவை, 18, நாகப்பட்டினம் தனியார் கல்லுாரியில் விடுவதற்காக பைக்கில் அழைத்து சென்றார்.நாகை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றபோது திருப்பட்டினம் புதிய பாலம் அருகில் எதிரே வந்த தனியார் பள்ளி வேன் (பி.ஒய்.01 ஏ.எச் 8158) பைக் மீது மோதியது. படுகாயமடைந்த கோவிந்தராஜன் இறந்தார். காயமடைந்த லக்க்ஷிதா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, வேன் டிரைவர் திருப்பட்டினம், மேலையூர் மாதவன், 37, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை