மேலும் செய்திகள்
மகள் மாயம்: தந்தை புகார்
25-Oct-2024
புதுச்சேரி : வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.புதுச்சேரி கொம்பாக்கம் செங்கேணியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி 60, இவரது மகள் வினோதினி 22, கண் பரிசோதகர். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து தட்சிணா மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, வினோதினியை தேடிவருகின்றனர்.
25-Oct-2024