உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

புதுச்சேரி: வில்லியனுார் சுல்தான்பேட் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில், 36; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி நிலாபானு, 22, இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்படுவது வழக்கம். கடந்த 26ம் தேதி காலை இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. அதையடுத்து முகமது இஸ்மாயில் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தார். அவரது மனைவி வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. முகமது இஸ்மாயில் கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை