| ADDED : ஜன 24, 2026 06:15 AM
புதுச்சேரி: புதுச்சேரி, முத்துமாரியம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினமும் இரவு 7:00 மணிக்கு விமானம், காமதேனு, அன்னம், நாகம், ரிஷபம், யானை, சிங்கம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, வரும் 31ம் தேதி காலை 8:00 மணிக்கு தேர் உற்சவம், மாலை 6:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 1ம் தேதி இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. வரும் 8ம் தேதி மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோதண்டபாணி, துணைத் தலைவர் கலைவாணி, செயலாளர் சுரேஷ், பொருளாளர் ராஜேஷ், உறுப்பினர் சகாயநாதன் பஸ்கே மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.