உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு பள்ளியில் ஐம்பெரும் விழா

 அரசு பள்ளியில் ஐம்பெரும் விழா

புதுச்சேரி: திலாஸ்பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சிக்கான பரிசளிப்பு, கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு பதக்கம் வழங்கல் உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு, தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஜெயந்தி வரவேற்றார். கனகவல்லி முன்னிலை வகித்தார். ஒய்வு பெற்ற தலைமையாசிரியர் பசுபதி ராஜன், அறிவியல் கண்காட்சியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து, கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பேட்ஜ் வழங்கப்பட்டது. ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார். சாந்தி தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்