மேலும் செய்திகள்
அமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
06-Oct-2025
புதுச்சேரி : புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கு நிதி வழங்க வேண்டும் என, ராஜஸ்தானில் நடந்த சுற்றுலாத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டில் அமைச்சர் லட்சுமிநாராயணன் வலியுறுத்திப் பேசினார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை 2025-26ல் சிறந்த சுற்றுலாத்தல மேலாண்மை, சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள், துாய்மை பராமரிப்பு மற்றும் சந்தைபடுத்துதல் முயற்சிகளை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு செயல்பாடு அடிப்படையிலான நிதி அளிக்கப்படுமென அறிவித்துள்ளது. நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சுற்றுலா வளர்ச்சி மற்றும் கட்டமைப்புகள் மேம்பாடு தொடர்பான முன்னெடுப்புகளை உறுதி செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நேற்றும், இன்றும் (15ம் தேதி) என, இரு நாட்கள் மாநில மற்றும் யூனியன் பிரதேச சுற்றுலா அமைச்சர்கள் மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் கெஜேந்திரசிங் செகாவத் மற்றும் பல்வேறு மாநில சுற்றுலா அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். புதுச்சேரி அரசின் சார்பில், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், கலை பண்பாட்டு துறை செயலர் முகமது ஆசன் அபித், மற்றும் சுற்றுலாத்துறை இயக்குநர் முரளிதரன் ஆகியோர் பங்கேற்றவனர் . சுற்றுலா மேம்பாடு தொடர்பாக மத்திய நிதிநிலை அறிக்கை 2025- - 26ல், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் சார்ந்து புதுச்சேரி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், செயல்பாடுகள் தொடர்பான விளக்க அறிக்கையை அமைச்சர் லட்சுமிநாராயணன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரிடம் வழங்கி, சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளுக்கான மத்திய அரசின் கூடுதல் நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மத்திய சுற்றுலா அமைச்சக அதிகாரிகளுடன் கலந்துரையாடி, புதுச்சேரி மாநில சுற்றுலா வளர்ச்சிக்கான நிதி வழங்கல் செயல்பாடுகளில் துணைநின்று மாநில வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
06-Oct-2025